“பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு… என் பேரை நீ சொல்லி கொண்டாடு…”
இராமனும் சீதையும் திருமணம் முடிந்த உடன் காட்டிற்கு வனவாசத்திற்காக சென்று இருந்தனர்.. அதன் பின்னர்
“இராமர், இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பினார்..
இந்த நாளையை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே நாம் தீபாவளியாக கொண்டாடுவதாக புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது..
மற்றொரு கதையாக கிருஷ்ணர் நரகாசூரணை அளித்ததை பற்றி பார்ப்போம்…
நரகாசுரன் என்பவன் பூமாதேவிக்கும் விஷ்ணுவின் அவதாரமான வராகத்திற்கும் பிறந்தவன். அப்படி பிறந்த நரகாசூரன் தன்னுடைய தாயைத் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாது வரத்தை பிரம்மாவிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்…
அதன் நரகாசூரனின் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் முறையிட்ட பின்னர்.., கிருஷ்ணன் நரகாசூரனை அழித்தார்.
அப்போது நரகாசுரன் இறக்கும் போது., தான் இறக்கின்ற நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது…
எனவே தான் இந்த நாளில் நாம் பட்டாசுக்கள் வெடித்து., இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம்.
இன்று உலகெங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடி கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..