இன்னிக்கு வீட்ல சுட்ட கத்தரிக்காய் சட்னி செய்து பாருங்க…!
பெரிய கத்தரிக்காய்-1
புளி- எலுமிச்சை அளவு.
உளுத்தம்பருப்பு-2 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
கருவேப்பிலை-1/4 கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
ஒரு சின்ன கிண்ணத்தில் புளி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
கத்தரிக்காயில் எல்லாப் பக்கமும் எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சுட்டுக் கொண்டு அதனை தண்ணீரில் போட வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் பருப்பு, சுட்ட கத்தரிக்காயை தோல் நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும்,அத்துடன் உப்பு மற்றும் ஊற வைத்த புளி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அவ்ளோதான் இப்போ சுவையான சுட்ட கத்தரிக்காய் சட்னி தயார்.