ஆரோக்கியமான காலை உணவு..! பாசிப்பருப்பு புட்டு..!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
நாட்டு சர்க்கரை 5 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கப் அளவிற்கு பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி நீர் ஊற்றி நன்றாக கழுவி பின் நீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பாசிப்பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் ஒரு துணியை போட்டு அதில் அரைத்த பருப்பை சேர்த்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும்.
வேகவைத்த பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு திருப்பவும் சிறிது அரைத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த பருப்பில் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை 5 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் டேஸ்டியான பாசிப்பருப்பு புட்டு தயார்.
இதனுடன் நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை என கலந்து சாப்பிடலாம்.