தேநீர் சுவையா போடனுமா..? இது ஒன்று போதும்..!
தேங்காய் பர்ஃபி செய்யும்போது கலர் தேவைப்பட்டால் கேரட் அல்லது பீட்ரூட் துருவல் சேர்த்து கொள்ளலாம்.
முட்டை சீக்கரம் கெட்டு போகாமல் இருக்க அதன் மீது எண்ணெய் தடவி வைக்கலாம்.
வீட்டில் அரைத்து வைக்கும் மிளகாய்த்தூள் மற்றும் கோதுமை மாவில் சிறிது உப்பு கலந்து நன்றாக மூடி வைக்க அதில் வண்டுகள் அண்டாது.
மொறு மொறு தோசைக்கு அரிசியுடன் வெந்தயம் மற்றும் பருப்பு சேர்த்து ஊறவைக்கலாம்.
வத்தகுழம்பு, சாம்பார் ஆகிய குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்தால் சரியாகிவிடும்.
கட்லெட் செய்ய தேவைப்படும் உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது உப்பு சேர்த்தால் கிழங்குகளில் உப்பு பிடிக்கும்.
சுடுநீரில் சிறிது சீரகத்தை போட்டுவைத்து அந்த நீரை குடித்தால் உடலுக்கு நன்மையளிக்கும்.
பருப்பு வேகவைக்கும்போது சிறிது எண்ணெய் சேர்த்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
தேநீர் தயாரிக்கும்போது சிறிது ஆரஞ்சு தோலை போட்டுவைத்து எடுத்தால் தேநீர் சுவையாக இருக்கும்.
பாகற்காயுடன் மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் வைத்து பின் சமைத்தால் கசப்பு தெரியாது.