அனிருத் பாடிய “மயக்கீரியே” பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பி.வி.சிந்து பதிவிட்டுள்ளார்.
வங்காள மொழிப் பாடலான ‘கச்சா பாதாம்’ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. உலகின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அந்த பாடலுக்கு நடனமாடி கடந்த வாரம் வீடியோவாக பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில்,இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக பி.வி.சிந்து பர்மிங்காம் சென்றுள்ளார். அப்போது அங்கு, அனிருத் பாடி சமீபத்தில் வைரலான “மயக்கீரியே” என்ற பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் லைக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.