குடியை விடுங்க முதல..! ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்.., நெல்சன் இயக்கத்தில் உருவான படம் தான் “ஜெயிலர்” இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் பெரும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலரும் அறிவுறுத்தினார்கள். ஆனால் நானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தோம் என அவர் கூறினார்.
ஹுக்கும் பாடல் தாரமான பாடல் என நினைத்தேன் ஆனால் அதில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது அதை நீக்க சொல்லி கேட்டேன்.
சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பு என்னைக்குமே தொல்லை தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ஏற்க மறுத்த போது நான் பயப்படுற ஆளுனு சொன்னாங்க, ஆமா நான் பயப்பட கூடிய ஆளு தான், நல்ல மனிதருக்கும், கடவுளுக்கும் மட்டும் தான், நான் பயப்படுவேன் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் நீங்கள் உயரத்திற்கு செல்லுவீர்கள்.., குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.., தயவு செய்து நீங்கள் குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள்.., நீங்கள் குடிப்பதால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தினருக்கும் தொல்லை தான், அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் இந்த குடி இனி வேண்டாம். என ரஜினிகாந்த் ரசிகர்கள் முன் பேசியுள்ளார்.