பாடகரின் மனோ மகன் மீது வழக்கு.. சிறுவர்களை தாக்கினாரா..?
ஆலப்பாக்கத்தில் வசிக்கும் கிருபாகரன் வயது 20 இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மதுரவாயிலில் வசிக்கும் 16 வயது சிறுவனும் வளசரவாக்கத்தில் இருக்கும் கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
நேற்று இரவு இருவரும் பயிற்சி முடித்து விட்டு வளசரவாக்கத்தில் இருக்கும் உணவகத்திற்கு உணவு வாங்க வந்திருக்கிறார்கள். அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த இரண்டு சிறுவர்களிடமும் சண்டையிட்டு தகராறு செய்துள்ளனர். அந்த கும்பலில் 5ல் ஒருவர் பாடகர் மனோவின் மகன் ஆவார்.
அங்கு ஒரே தகராறு ஏற்பட்டதில் அந்த கும்பல் இரு சிறுவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. முட்டிபோடவைத்து இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக அங்கு இருந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் காயமடைந்த இரு சிறுவர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் காயமடைந்த இருவரும் போலீசாரிடம் புகாரளித்த நிலையில் போலீசார் அந்த 5 நபர்கள் கொண்ட கும்பலை விசாரிக்கும்போது அதில் ஒருவர் பிரபல பிண்ணனி பாடகர் மனோ அவர்களின் மகன் ரஃபி ஆவார். போலீசார் மனோ அவர்களின் வீட்டிற்கு சென்று அவருடைய மகன் ரஃபி அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
அப்போது ரஃபி அவர்கள் குடிப்போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஃபி சிறுவர்களை தாக்கியது உண்மையாகும் நிலையில் மனோ மகன் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
