மன்னிப்புகேட்ட ராகுல்காந்தி….!! உடனடியாக தீர்க்க முயற்சி…!!
காங்கிரஸ் மூத்த தலைவரும்., நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி தற்போது மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
காங்கிரஸ் மூத்த தலைவரும்., நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி தற்போது வயநாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தன்னுடைய சகோதரி பிரியங்கா காந்தியை ஆதாரத்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் நேற்றுடன் பிரச்சாரம் முடிவைய இருந்ததால்., வயநாட்டிற்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்..
இந்நிலையில் இன்று அவர் மகாராஷ்டிரா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டிருபதாவது.
உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்று நான் சிக்லிக்கு வந்து உங்களை (சோயாபீன் விவசாயிகளை) சந்தித்து நீங்கள் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்தேன்., ஆனால் இங்கு மழையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் என்னால் உங்களை சந்திக்க வர முடியவில்லை.
மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்துக்கொண்டு இருப்பதாக நான் தகவல் அறிந்தே. சோயாபீன், மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு பாஜக அரசு சரியான நிர்ணயம் தருவதில்லை.
விவசாயிகளின் இந்த நீண்ட நாள் பிரச்சனையை இந்திய அரசு உடனடியாக தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறே அவர் குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..