ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார் ராகுல்காந்தி..!!
குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்..
78வது சுதந்திர தினமானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.., இதனை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. மேலும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்…
2024 மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றுள்ளனர். இது வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் பயிற்சி. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் போது, அது ஜனநாயகத்தின் கருத்துக்கு எதிரொலிக்கும் வாக்கு. இந்தியாவின் வெற்றிகரமான தேர்தல்கள் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துகின்றன. இன்னும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு, நாங்கள் ஆதரவை கொடுப்போம் என இவ்வாறே அவர் பேசியுள்ளார்..
இந்நிலையில் நடந்து முடிந்து மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார்..
இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா அல்லது சாதாரண சந்திப்பா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழும்பிய நிலையில் இது சாதாரண சந்திப்பு என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..