கொரோனா வைரஸ்; மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை!

மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப்போவதாக ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “கொரோனா தடுப்பில் மத்திய அரசு போதுமான அக்கறை காட்டவில்லை என விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிர்வாக சீர்க்கேட்டால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கும் நிலை உருவாகும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

What do you think?

மாநிலங்களவை தேர்தல் – 6 பேரும் போட்டியின்றி தேர்வு

வைகோவின் கேள்விக்கு பியூஷ் கோயல் பதில்