இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்பு குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பெல்ஜியம் சென்றுள்ள அவர், தலைநகர் பிரஸ்சல்சில் வாழும் இந்திய மக்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர், இந்தியாவில் பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தலித் சமூகங்கள், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்ட சமூகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள், ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது காஷ்மீர் உள்பட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பொதுவான விவாதம் எனவும் ராகுல்காந்தி கூறினார்
ரஷியா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், அதில் யாரும் தலையிட உரிமை இல்லை என எச்சரித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..