ராகுல்காந்தியின் அதிரடி..!! மோடிக்கு இனி..!! அசத்தும் கோவை மக்கள்..! அடுத்த பிளான் கேரளாவா..?
ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.., இதனால் தேர்தல் களம் வழக்கத்தை விட அதிகமாக சூடுபிடித்துள்ளது.
தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது முதல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கவுள்ளார்.., இதனால் பாஜகவிற்கு பதிலடி கொடுக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
தேர்தல் சமயங்களிலும், தேர்தலுக்கு பிறகும் பாஜகவின் ராஜதந்திரங்கள் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக தேர்தல் பிரச்சார சமயத்தில், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக பிரதமர் மோடியை தமிழகத்திற்கு வரவழைத்து “ரோடு ஷோ” நடத்தி பாஜக பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
மோடியின் இந்த ரோடு ஷோ தமிழகத்தில் நடப்பதற்கு முன் வடமாநிலத்தில் பலமுறை நடத்தப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி கொடுத்தது.., ஆனால் இதே விஷயம் தமிழ்நாட்டில் எடுபடுமா என கேட்டால் கட்டாயம் எடுபடாது.
அதற்கு காரணம், கடந்த வருடம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது, பெங்களூரில் மோடியின் பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தப்பட்டது. ஆனால் அதில் பாஜக மண்ணை கவ்வியது.. இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் மோடியின் ரோடு ஷோ நடத்தபட்டது அதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் நடத்தப்பட்டது.
ஆனால் கோவையில் மோடியின் ரோடு ஷோ நடத்தப்பட்ட போது மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “கோ பேக் மோடி” என சொன்னார்கள்.., சென்னையிலும் வட மாநிலங்களை விட கம்பேர் செய்யும்போது கூட்டம் குறைவு.., அந்த கூட்டம் கூட காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் என பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இன்று வரை அவருக்கு ஒரு சில பகுதிகளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பாக கோவை அவிநாசி.
அண்ணாமலையின் நடைபயணத்திற்காக கோவை வந்த பிரதமர் மோடி, தற்போது ரோடு ஷோ நடத்தவும் கோவை வந்துள்ளார். ஆனால், இந்த ரோடு ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை அதாவது தமிழ் மக்கள், மோடியின் இந்த ரோடு ஷோ கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் அனைவரும் வட மாநிலத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதனால் கோவையில் பெரும் சர்ச்சை கிளம்பியது அதே சமயம் மோடியின் ரோடு ஷோவிற்கு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதேசமயம், பிரதமர் மோடி திமுகவை குறித்தும் அவர்கள் திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டது.., பெரும் சர்ச்சையை கிளப்பியது..
இதுகுறித்து பேசிய மோடி தமிழக மக்கள் எல்லாம் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, கேடுகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. என விமர்சித்து பேசியுள்ளார். இது அங்கிருக்கும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே, அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை கோவை தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், ரோடு ஷோ நடத்தி பிரச்சனைகளை ஈடுகட்ட முயன்றுள்ளார், ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் கோவைக்கு வரப்போகிறார்கள். இவர்கள் இருவரும் பொதுக்கூட்டத்தில் என்ன பேசப்போகிறார்களோ..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
அத்துடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சுக்கு ராகுல் காந்தி என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவையின் பல இடங்களில் மக்கள் கோவை மண்ணின் மைந்தர்கள் வருக.., வருக என போஸ்டர் அடித்தும் கோலமிட்டும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வந்த வடமாநிலத்தவர்கள் கூட்டத்தை விட, ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது..
மொத்தத்தில், 2 தலைவர்களுமே ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய போவது, இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வருகிற ஏப்ரல் 15ம் தேதி, பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேரளாவில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி நேருக்கு நேர் இரண்டு பேரும் மோதவுள்ளதால், கேரளா மாநிலத்தில் பரபரப்பு இப்போதே தொடங்கி விட்டது. இப்படிப்பட்ட சூழலில், கோவை பொதுக்கூட்டமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..