‘விலையை குறைக்க சொன்னா உயர்த்தியுள்ளார்’ மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .2 மற்றும் செஸ் வரி தலா ரூ. 1 என பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு பேரிடியாக இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அதன் மூலம், உலகளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், பிரதமரோ அதற்கு மாறாக எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

What do you think?

சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக ஐஎஸ்எல் தொடரின் கோப்பையை வென்ற கொல்கத்தா!

‘இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளாரா யுவன்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்!