லோக்சபா தேர்தல் வரை திமுக மீது ரெய்டு நடக்கும்..!!
லோக்சபா தேர்தல் வரை.., திமுக மீது இப்படி தான் ரெய்டு நடக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது..,
செந்தில் பாலாஜி மீது ரெய்டு :
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்..,
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஊழல் செய்த குற்றத்திற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி.., அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில்.., ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.., ஆனால் இவரின் ஜாமீன் வழக்கு தற்போது வரை மறுபரிசீலனை செய்யாமல்.. வாய்த… போடப்பட்டு வருகிறது.
அமைச்சர் பொன்முடி ரெய்டு :
சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளின் கீழ்.., அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். அதாவது நிலம் அபகரிப்பு வழக்கின் கீழ் இவர் விடுதலை செய்யப்பட்டார்.
1996 – 2021 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இவரின் மாமியார் சரஸ்வதியின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து நிலம் அபகரித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிலம் அபகரிப்பின் பெயரில் அமைச்சர் பொன்முடி மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஆனால்.., போதிய ஆதாரங்கள் பத்தவில்லை என்பதால் வழக்கு செல்லவில்லை.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முறையாக கையாளவில்லை என.., மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
மற்றொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு ஆளாகினார்.. அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு கூப்பிட்டாலும் ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெகத்ரட்சகன் ரெய்டு :
இது போக திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடத்தப்பட்டது… வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார்.
அதோடு இவரின் மனைவி பெயரில் 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் எழுப்பப்பட்ட நிலையில். வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள்.., நடத்திய சோதனையில். இவருக்கு சொந்தமாக 15+ கல்லூரிகள் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.
இங்கிருந்து முறையின்றி பணம் வந்ததாக வருமான வரித்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கப்பட்டன.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இவரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.
ஏ வ வேலு ரெய்டு :
இந்த நிலையில் தற்போது 5வது நாளாக ஏ வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் ஐந்தாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர் ரெய்டுகள் :
லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள் தொடரும் என அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது..
இதோடு சோதனைகள் முடியாமல் இன்னும் சில மூத்த அமைச்சர்களின் மீது சோதனைகள் தொடரும் எனவும் அவர் பாஜக தெரிவித்து இருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..