தேவயானியை பற்றி மனம் திறந்த ராஜாகுமார்..காதலில் ஒரு சோகம்..
தேவயானி:
தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை தேவயானி. தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ராஜாகுமார்:
தமில் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆன இவர் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்க்கை:
புகழின் உச்சியில் இருந்த தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் எதிர்ப்புகளை மீறி இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை திரைபிரபலங்கள் பலரும் விமர்சித்து பேசினர்.
திருமணத்தை இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் காதல் திருமணம் செய்ததால் நானும் என் மனைவியும் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு என நமது மதிமுகம் தொலைக்காட்ச்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளர்.
பேட்டியில் கூறியதாவது:
அதில் நானும் தேவயானியும் திருமணம் செய்ததை பலர் அந்த நேரத்தில் விமர்சித்தார்கள். நான் அழகா இல்லை என்று எவ்வளவோ பேர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தேவயானி எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுத்தது கிடையாது. எங்களுடைய திருமணம் முடிந்த நேரத்தில் நாங்களும் குழந்தைத்தனமாக தான் இருந்தோம்.
குழந்தை பெற்று கொள்ள வேண்டாம்:
நான் நமக்கு குழந்தை வேண்டாம் என்று உறுதியாகதேவையானியடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் தேவயானி அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.
என்னை என்னுடைய அம்மா, அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.
இனி என்னைப் போல இன்னொரு குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என்று நான் தேவயானிடம் சொன்னேன். ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார்.
பிறகு தேவயானி குழந்தை வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். அதற்கு பிறகு தான் எங்களுடைய முதல் குழந்தை உருவாகி இருந்தது.
தேவயானி கர்ப்பமாக இருக்கும் போது பிப்ரவரி கடைசியில் தேதி கொடுத்திருந்தார்கள். ஆனால் தேவயானிக்கு அதற்கு 48 நாட்களுக்கு முன்பே இடுப்பு வலி வந்துவிட்டது.
நாங்கள் இருவரும் தனியாக நின்றோம்:
உடனே நாங்கள் மருத்துவமனைக்கு போனோம் அங்கு 12.5க்கு என் குழந்தை பிறந்தது. தேவயானி மருத்துவமனையில் சேர்த்திருந்த நேரத்தில் எங்களுக்கு துணையாக யாருமே கிடையாது. நாங்கள் இருவரும் மருத்துவமனையில் தனியாக நின்றோம் .
அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டில் கணவன் மனைவி ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க தான் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன உதவிகள் செய்து கொண்டு இருந்தாங்க. அவங்க தேவயானியை மருத்துவமனையில் சேர்த்ததை கேள்விப்பட்டு வந்தாங்க.
அந்த நேரத்தில் 12.5க்கு குழந்தை அழுற சத்தம் கேட்டதும் நான் மருத்துவமனையில் எங்கேயோ குழந்தை அழுகிறது என்று சொன்னேன் அவங்க உனக்கு தான் குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னாங்க.
குழந்தை பிறந்தது சந்தோஷமான விஷயமா இருந்தாலும் கூட எனக்கு அந்த நேரத்தில் நிறைய விஷயங்கள் தெரியாமல் தான் இருந்தது.
பிறகு குழந்தையை வளர்த்து எடுப்பதற்கு தேவயானியும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.
-பவானிகார்த்திக்