’50 வயதுக்கு மேல் வெளியே நடமாட தடை’ மாநில அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதித்த மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். அங்கு 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த கூட்டத்துக்குப் பின்பு முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக கூடக் கூடாது என்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுவதாகவும் அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழி முன்னெச்சரிக்கையாக இருப்பதே அதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது மாநில அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த மாநிலத்தில் சர்ச்சையையம் மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

‘தேனி அருகே எருக்கம் பால் கொடுத்து பெண்சிசுக்கொலை’ தாய் மற்றும் பாட்டி கைது!

டிக்கெட் கேன்சல் செய்தால் முழுத்தொகையும் ரிட்டன் – IRCTC அறிவிப்பு