ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

7–வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. இதில் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட், 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கமும் வென்றார். அத்துடன் அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை 24–ந் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

What do you think?

மண்ணை விட்டுச்சென்ற தொண்டனால் கதறி அழுத வைகோ!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 பேர் போக்சோவில் கைது