அதை கமலிடம் ஆலோசனை கேட்ட ரஜினி..!! இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!!
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.., அறிமுகமான பொழுதில் நடித்த ஒரு சில படங்கள் பின்னர் நடித்த முள்ளும் மலரும், ஒரு கை ஓசை, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என்பது மாதிரியான சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் ரஜினி ஆக்சன் ஹீரோவாகவே நடித்தார்.
சில அழுத்தமான கதை அம்சமுள்ள படங்கள் ரஜினியை தேடி வரும்போது இதற்கு நான் செட்டாக மாட்டேன் நீங்கள் கமலை பாருங்கள் என்று அனுப்பிவிடுவார்.
அப்படி ரஜினி அனுப்பிய பல படங்களில் கமல் நடித்து அது பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது. குறிப்பாக கல்யாணராமன் போன்ற சில சிக்கலான கேரக்டர்களில் நடிக்க வேண்டி வரும் போது ரஜினி கமலிடம் தான் ஆலோசனை கேட்பார்.
குறிப்பாக முள்ளும் மலரும் படத்தில் நடித்துப் போது கமலுக்கு போன் செய்த ரஜினி புது டைரக்டர் ஆக இருக்காது படத்துல பெருசா பைட்டுல்ல இது சரிப்பட்டு வருமா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கமல் மகேந்திரன் எங்கள் ஊர்காரர். எங்கள் குடும்ப நண்பர். அவர் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் .அவர் சொல்வதை அப்படியே செய்யுங்கள் போதும் என்றார். இதேபோன்று மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினி நடித்த ஒழுங்கில்லாத உடைகள் பெரிய செருப்புகள் டல் மேக்கப் இவற்றுடன் நடிக்க வேண்டும்..
ரஜினியும் தலைப்பை பார்த்துவிட்டு ஒரு கெத்தான படம் என்று கருதி படப்பிடிப்புக்கு சென்றார் அங்கு சென்ற பிறகுதான் இது வேற மாதிரியான படம் வேற மாதிரியான கதை என்பது புரிந்தது.
மணிரத்தினம் தனது கேரக்டரில் அழுத்தமான உணர்வுகளை எதிர்பார்ப்பார். அதை ரஜினியால் செய்ய முடியவில்லை அதனால் வெறுத்துப்போன மணிரத்னம் ரஜினி வேண்டாம் கமலை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.
பயந்து போன ரஜினி கமலுக்கு போன் செய்து விபரத்தை சொல்ல நீங்க எதையும் தனியா செய்யாதீங்க மணிரத்தினத்தை நடித்துக் காட்ட சொல்லுங்க அவர் நடித்துக் காட்டுவார் அதை அப்படியே செய்திடுங்க..
முக்கியமா உங்க கேரக்டர்ல ரஜினி தெரியக்கூடாது மணிரத்னம் தான் தெரியணும் என்றார். இடையே அவ்வப்போது டிப்ஸ் கொடுத்தார். அதனால் தான் இன்றைக்கும் தளபதி படத்தில் ரஜினியின் நடிப்பு தனித்து தெரிகிறது. இந்த நிகழ்வுகளை ரஜினியை பல மேடைகளில் பகிர்ந்து இருக்கிறார்.
தொழிலில் போட்டி இருந்த போதும் இன்றைக்கும் ரஜினியும் கமலும் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களின் பலம், பலவீனம் இரண்டையும் புரிந்து வைத்திருப்பதால் தான்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..