ரஜினி திரைப்படத்தின் இரண்டு மாஸ் அப்டேட்…வேட்டையன் ரிலிஸ் தேதி வெளியீடு..!
ரஜினிகாந்த்:
அபுர்வராகங்கள்,16 வயதினிலே போன்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
அதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பாபா,சிவாஜி,சந்திரமூகி போன்ற திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவிலே அதிகம் சம்பளம் வாங்கும்நடிகராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கூலி படத்திலும் நடிக்க உள்ளார்.
வேட்டையன்:
ஞானவேல் இயக்கத்தில் லைக்க ப்ரொடக்ஸன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்த நிலையில் ரிலிஸ் தேதி குறித்து எந்த தகவலும் கிடைக்கமால் இருந்தது.
ரசிகர்களும் ரிலிஸ் தேதிக்காக காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது வேட்டையன் மற்றும் கூலி திரைப்படத்தின் இரண்டு மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.
ரிலிஸ் தேதி:
தகவலின் படி வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவலை நடிகர் ரஜினிகாந் கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் 171வது படமான கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-பவானிகார்த்திக்