CryCry

‘தேசிய ஊடகங்களுக்கு அழைப்பு’ இன்று வெளியாகிறதா ரஜினியின் கட்சி அறிவிப்பு?

இன்று காலை 10.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில்,தற்போதைய அரசியல் நிலவரம், கட்சி ஆரம்பிப்பது குறித்து மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பின்பு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று 10.30 மணியளவில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியாளர் சந்திப்புக்காக தேசிய ஊடங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இன்று ரஜினி தான் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘சர்ச்சில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்ட முதியவர்’ சென்னை அருகே பரபரப்பு !

இன்று தொடங்குகிறது இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர்!