இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

இன்று ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து சந்திக்கிறார்.

“தான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோர் என்று கூறப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றமும் தொடங்கப்பட்டு அதற்காக மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்‌தின் மாவட்டச் செயலாளர்கள் இடையே ஒற்றுமில்லாத சூழல் நிலவுவதாக தொடர்ந்து புகார்கள் ரஜினிகாந்திடம் வந்துள்ளன. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் 38 பேரிடம் ரஜினிகாந்த் பேச நினைத்துள்ளார் இதனால் அவர்கள் அனைவரையும் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து அவர்கள் அனைவரிடமும் ரஜினிகாந்த் காணொளி காட்சி மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

‘ஹோலி கொண்டாட்டம் வேண்டாம்’ பிரதமர் வழியில் அமித்ஷா!

‘ரசிகர்கள் வேண்டாம்’ விஜய் எடுத்த அதிரடி முடிவு!