‘செம ஸ்டைலாக காட்டுக்குள் சாகசம் செய்யும் ரஜினிகாந்த்’ வைரலாகும் Promo வீடியோ

ரஜினிகாந்த் பங்கேற்ற IntoTheWild நிகழ்ச்சியின் Promo வீடியோவை வெளியிட்டுள்ளார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர்ல் கிரில்ஸ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பியர்ல் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் IntoTheWild நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து நிகழ்ச்சிக்கான Motion Poster வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான Promo வீடியோவை பியர்ல் கிரில்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் பியர்ல் கிரில்ஸுடன் இணைந்து காட்டுக்குள் சாகசங்கள் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

What do you think?

வைகோவின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதில்

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு – மத்திய அரசு