மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய ரஜினிகாந்த் !

டெல்லியில் வன்முறை நடந்திருப்பதற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ,டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். 

டெல்லி வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உளவுத்துறை தோல்வியடைந்திருக்கிறது என்றால் அது உள்துறையின் தோல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரால் மக்களைத் தூண்டி வருகின்றனர். இது சரியான போக்கே கிடையாது. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். 

எனக்குத் தெரிந்தவரையில் குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படாது. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும், அதனால் பிரயோஜனம் ஏற்படாது. உடனே நான் பிஜேபியின் ஊதுகுழல், நான் பிஜேபி ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்த விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. நான் என்ன உண்மையோ அதைச் சொல்கிறேன். அவ்வளவுதான் என ரஜினிகாந்த் தெரிவித்தார்

What do you think?

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் !

கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி !