‘என் கருத்தை கொண்டு சேர்த்தற்கு நன்றி’ ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அதில் தான் அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் இல்லை என்றும் நல்லவர், நேர்மையானவர், அறிவாளியான ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சிக்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தனது கட்சியில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர உள்ளதாகவும் அரசியலில் பணம் செலவழிப்பது இல்லாமல் மக்கள் அலை ஒன்று, எழுச்சி ஒன்று உருவாகவேண்டும் அதை ரசிகர்களும், ஊடகங்களும் உருவாக்க வேண்டும் அதன்பின்பு தான் அரசியலுக்கு வருவதாகவும் கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலருக்கும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்.இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘தமிழிசையை பற்றி அவதூறு’ டிக்டாக் புகழ் மன்னை சாதிக் கைது !

வேளாண் கடன் உச்சவரம்பை உயர்த்துக! – வைகோ கோரிக்கை