பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ரஜினிகாந்த் ஆதரவு

நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று முன்தினம் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி(நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்றும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த அழைப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது நிலையில் உள்ளது. அது 3வது இடத்திற்கு போய் விடக்கூடாது. மக்கள் வெளியில் நடமாடும் வேளைகளில் இருக்கும் இந்த வைரஸ், 12 – 14 மணிநேரத்தில் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை தடுத்து விடலாம்.

அதனால் தான் பிரதமர் மோடி வரும் மார்ச் 22ம் தேதி ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இத்தாலியில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருந்தபோது அந்த நாட்டு அரசாங்கம் எச்சரித்தது. ஆனால் மக்கள் அதை கண்டுகொள்ளவில்லை இதனால் பல ஆயிரம் உயிர்கள் இறந்து போனார்கள். அதேமாதிரியான ஒரு நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது.

எனவே வரும் 22ம் தேதி அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வைரஸை பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலரும் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் சொன்ன மாதிரி மாலை 5 மணிக்கு நாம் அனைவரும் அவர்களை மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று ரஜினி கூறியுள்ளார்.

What do you think?

‘அசட்டு தைரியம் வேண்டாம்’ – கமல்ஹாசன் வேண்டுகோள்

புகையும் மதுவும் கொரோனாவின் நண்பர்கள்! – உலக சுகாதார அமைப்பு