‘பாஜக உள்ளிட்ட இந்த 4 முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ ரஜினி அதிரடி முடிவு?

பாஜக உள்ளிட்ட 4 முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவேண்டாம் என்று ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த நேற்று தனது மன்றத்தின் 38 மாவட்ட நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓராண்டுக்கு பிறகு கட்சி ஆரம்பிப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் தான். அது என்ன என்பது பற்றி நேரம் வரும் போது சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அந்த தகவலின்படி, “ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் நாம் விரைவில் கட்சி ஆரம்பிக்க போறோம்.அதுக்காகதான் உங்ககிட்ட பல பொறுப்பை கொடுத்தேன். ஆனாலும் உங்களில் நிறைய பேர் சரியாக செயல்படவில்லை என்று கண்டித்துள்ளார்.மேலும் கட்சி ஆரம்பித்தாலும் நான் முதலமைச்சர் கிடையாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சி என் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும் திமுக, அதிமுகவில் இருந்து நிறைய பேர் நம்ம கட்சிக்கு வர இருக்கிறார்கள் அவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளை தர போவதாக ரஜினிகாந்த் கூறியதாகவும், அதேபோல இஸ்லாமியர்கள் பாஜகவை எதிர்ப்பதால் பாஜகவுடன் நம்மால் கூட்டணி வைக்க முடியாது. காங்கிரஸுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

இதே போல திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் மூலம் ரஜினிகாந்த் திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய 4 முக்கிய கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டார் என்றும் அவர் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

What do you think?

சிக்கன்,மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வருமா?

‘மோகன்லாலின் மரைக்காயர் அரேபிக்கடலின் சிங்கம்’ படத்தின் Trailer வெளியானது!