‘இது மிகப்பெரிய இழப்பு’ அன்பழகனின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு இழப்பு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.அவரது உடலுக்கு தி.மு.கவினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு’ முதலமைச்சர்!

‘தொடரும் மரணம்’ சேலத்தில் நித்யானந்தாவின் சீடர் தற்கொலை!