WTFWTF

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை – அரசியல் திட்டத்தை அறிவித்த ரஜினிகாந்த்!

தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்று கூறினார்.

இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பெல்ஸ் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறுகையில்,” ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு என்றும் நான் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என்று நான் கூறியது பலவிதமாக வெளியே வந்தது. ஆனால் மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை என்று கூறினார்.

மேலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைவருக்கும் தெளிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது என்று கூறினார்.

அரசியலில் தான் மூன்று திட்டங்கள் வைத்துள்ளதாகவும் முதல் திட்டமாக கட்சியில் தேவையான பதவிகள் மட்டுமே இருக்கும் என்றும் 2வது திட்டமாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும் மூன்றாவது மற்றும் முக்கிய திட்டமாக கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை” என்றும் கூறினார்.

மேலும் “60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்புள்ளது. புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன் என்றும் 30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்புள்ளது” என்றும் கூறினார்.

What do you think?

-1 points
Upvote Downvote

இன்று தொடங்குகிறது இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர்!

“Minimum Balance தேவையில்லை” SBIன் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!