‘கொரோனா வைரஸ்’ ரஜினியின் புதிய டிவிட் !

தமிழகத்தில் அரசு எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்களையும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றும் அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் “இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

டிக்கெட் கேன்சல் செய்தால் முழுத்தொகையும் ரிட்டன் – IRCTC அறிவிப்பு

நடிகர் பிரசாந்துடன் இணையும் மிஸ் இந்தியா!