‘பாஜகவில் இணைவாரா ரஜினிகாந்த்?’ நடிகர் ராதாரவி வெளிப்படையான பதில்!

ரஜினிகாந்த் பாஜகவில் இணைவாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்று பாஜக பிரமுகர் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான ராதாரவி தர்மபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவாரா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “இது இந்தியாவிலேயே மிக முக்கியமான கேள்வி இதை என்னிடம் கேட்கிறீர்கள். இதுகுறித்து எனக்கு தெரியாது. எல்லா விஷயங்களுக்கும் ரஜினிகாந்த் அறிக்கை கொடுத்து வருகிறார். இருந்தாலும் முடிவு வரட்டும் பிறகு பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

சமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேற நினைக்கும் பிரதமர் மோடி!

நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகும் அருவா படத்தின் கதை இதுவா?