ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படத்தின் வில்லன் இவரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபி சந்த் வில்லனாக நடிப்பதாக தகவல்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், மீனா மற்றும் குஷ்பூ என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

டி. இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் வில்லன் யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. ஆம், பிரபல தெலுங்கு நடிகர் கோபி சந்த் தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

gopichandக்கான பட முடிவுகள்

What do you think?

‘மழையால் அடித்த Luck’ டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!

ஜிப்ஸி சென்சார் கட் 2 – ‘ஒரே நாடு, ஒரே மொழி’