கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் தமிழரின் உணவு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வெளிநாட்டினர் தமிழர்களின் உணவான ரசத்தை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. பொதுவாக இந்த கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு தான் வேகமாக பரவுகிறது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான ரசத்தை வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசத்தில் உள்ள மிளகு, பூண்டு உள்ளிட்ட பொருட்களால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரசப்பொடி அதிகளவில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடியையும் வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறபடுகிறது. இதனை அறிந்த பலரும் உலகமே கண்டு பயப்படும் கொரோனா வைரஸ் நோயை தமிழர்களின் உணவான ரசம் விரட்டி அடிக்கிறது என்றும் சிலர் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

What do you think?

‘பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி’ பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்!

‘கேரளாவில் மருத்துவரை தாக்கிய கொரோனா’ தனிமைப்படுத்தப்பட்ட 30 மருத்துவர்கள்!