மஹாராஷ்டிராவில் மறு தேர்தல்..!! இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு…!!
மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் உள்ள மக்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பியதால் ஓட்டுச்சீட்டு முறையில் மறு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மஹாயுதி கூட்டணி 230 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. சோலாப்பூர் மாவட்டத்தின் மல்ஷிராஸ் சட்டசபை தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ராம் சத்புதேவை, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவை சேர்ந்த உத்தம் ஜன்கர், 13 ஆயிரத்து 147 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில் மல்ஷிராஸ் தொகுதிக்கு உட்பட்ட மார்க்கட்வாடி கிராம மக்கள், இந்த வெற்றியில் சந்தேகம் எழுப்பினர். இந்த கிராமத்தில் மொத்தம், 2,000 ஓட்டுகள் உள்ளநிலையில் ஆயிரத்து 900 பேர் ஓட்டளித்துள்ளனர்.
இதுவரை, தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உத்தம் ஜன்கருக்கு ஆதரவாகவே இந்த கிராமத்தில் ஓட்டளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை, ஜன்கர் 843 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்; பா.ஜ.க வேட்பாளர் சத்புதே 1,003 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் கிளப்பிய கிராம மக்கள், ஓட்டுச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகியபோது அவர்கலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்க்கட்வாடி கிராமத்தில் ஓடடுச்சீட்டு முறையில் மறு தேர்தல் நடத்த இருப்பதாக கிராம மக்கள் நேற்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 2 முதல் 5 வரை இந்த கிராமத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..