இதை படிச்சுட்டு தூங்க போங்க..! அப்புறம் பாருங்க உங்கள யாரும் தடுக்க முடியாது..!
1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்.. ஏன்னா ஒன்று பிரிந்தாலோ அறந்தாலோ மற்றொன்றை சேர்க்க முடியாது.
2. எல்லா பெண்களையும் நாம் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் கூட, செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..
3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு..! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்..
4. நிம்மதியாக இருக்கும் வயதிலே மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின்பு நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் அன்றாட வாழ்க்கை தேடல்..
5. இவ்வுலகத்திலே என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..
6. ஒரு புடவை வாங்குறதுக்கு முன்னூறு புடவைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கேட்டான் கணவன் : “ஆதிகாலத்தில ஏவாள் என்பவள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். ஆதாமுக்கு இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை இல்லை.”
அதற்கு மனைவி சொன்னால்: “அதுக்கும் அவன் எத்தனை மரங்கள் ஏறி இறங்கினானோ தெரியவில்லை..?
7. அலைபேசியில் ஒரு குரல் கேட்டது .. “டேய் மச்சான்… எங்க இருக்க மச்சான்.. ? “வீட்லதான்டா இருக்கேன்…”
“அப்பாடா… இப்பதான்டா நிம்மதியா இருக்கு…
ஏன்டா..? என்ன விஷயம்..?
“அதில்லடா…” காலையில பேப்பரை பார்த்தேன். அதில், உங்க ஏரியால சும்மா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன் காரங்க புடிச்சு கொண்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான் மச்சான் … எங்க நீயும் மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்..
8. அம்மா : என்னடி உன் வீட்டுக்காரர் தினமும் இப்படி குடிச்சு கிட்டே வராரே இது
நல்லாவா இருக்கு.?
மகள் : தெரியலை , நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை அம்மா..! பார்த்து சொல்லவா ..,
9. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர் தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு
10. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?
இல்ல டாக்டர் … வெளில போர்டு வெச்சிருக்கீங்க பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு… அதான் கேட்டேன்.”
11. முதலாளி : டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன். நீ கடையைப் பார்த்துக்க.
முனியன் : உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி.? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே..
12. டீச்சர் கேட்டார் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?
அதற்கு குறும்புக்கார மாணவனின் பதில்… தலையில சந்திரன் இருப்பதால் எப்போதும் வெளிச்சமாக இருக்கும்… EB பில் வராது..
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் தண்ணீர் குடம் தூக்கனும் தேவை இல்ல மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீரும் ஏற்ற வேண்டாம்..
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை…
மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
14. ஜட்ஜ் : அய்யா நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க..? ஆனா நீங்க இல்லேன்னு சொல்லுறீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா..?
ஐயா என் பொண்டாட்டிய கூப்பிட நான் மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருக்கும் போது பிடிச்சாங்க அய்யா..! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா..?
ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்.., முதல்ல அவரை விடுதலை செய்ங்க…
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..