நேற்று எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ். தி.மு.க.வின் பி டீம் போன்று செயல்படுகிறார் என்றும் ஓ.பி.எஸ் மற்றும் முதல்வரரம் அரை மணி நேரம் சந்தித்து பேசினார் என்று கூறியிருந்தார்.
அதற்கு இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ். பதிலளித்துள்ளார். பழனிசாமி அவர்கள் பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டுகிறார். முதல்வரை அரை மணி நேரம் சந்தித்தது பேசினேன் என்பதை நிருப்பித்தால் அரசியலில் இருந்து விலக தயாராக உள்ளேன், அப்படி நிருப்பிக்க தவறினால் அவர் விலக தயாரா?? என்று கூறியதோடு,
ஐம்பதாம் ஆண்டு விழாவில் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டு இருந்தபோது விரும்பத்தகாத பிரச்சனைகளை யார் தொடங்கினார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் ஊர்ந்து ஊர்ந்து பதவிகளை பெற்றவர்கள் யார்? நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யார்? என்றும் கூறினார்.