மார்கெட்டில் சுற்றிவரும் போலியான பன்னீர்..! உஷார் மக்களே..!
உண்மையான பன்னீர் மற்றும் போலி பன்னீர்:
உண்மையான பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, ஆனால் போலி பன்னீரானது காய்கறி எண்ணெய், எமல்சிஃபையர்கள், ஸ்டார்ச் போன்ற பொருட்களை வைத்து போலியாக தயாரிக்கப்படுகிறது.
உண்மையான பன்னீர் கால்சியம், புரதம் நிறைந்துள்ளது ஆனால் போலியான பன்னீர் குறைந்த புரதம், அதிகமான டிரான்ஸ்ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.
உண்மையான பன்னீர் பால் சுவையையும் மென்மையான அமைப்பையும் பெற்றிருக்கும் ஆனால் போலியான பன்னீர் கடினமாகவும் போலியான சுவையையும் கொண்டிருக்கும்.
போலி பன்னீரை கண்டுபிடிக்க வழி:
சுவை மற்றும் அமைப்பு:
உண்மையான பன்னீர் நல்ல வெள்ளை நிறத்தையும் மென்மையாக இருக்கும் அமைப்பையும் பெற்றிருக்கும் ஆனால் போலி பன்னீர் கடினமான அமைப்பையும் கொண்டிருக்கும்.
சமைக்கும்போது உண்டாகும் மாற்றம்:
உண்மையாக பன்னீராக இருந்தால் சமைக்கும்போது அது சற்று கலர் மாறும் ஆனால் போலி பன்னீர் உருகிவிடும்.
அயோடின் சோதனை: ஒரு ஃபேனில் பன்னீர் சேர்த்து சிறிது நீர் கலந்து கொதிக்க வையுங்கள். அதில் சிறிது அயோடின் சேர்த்தால் அது நீல நிறமாக மாறினால் அது போலியான பன்னீர் ஆகும்.
துவரம் பருப்பு சோதனை: கொதிக்க வைத்த பன்னீரை ஆறவைத்து அதில் கொஞ்சம் துவரம் பருப்பு சேர்த்தால் அது சிவப்பு நிறமாக மாறினால் அது போலியான பன்னீர் ஆகும்.
போலி பன்னீர் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எனவே பன்னீர் வாங்கும்போது அது உண்மையானதா என கண்டறிந்து வாங்க வேண்டும்.