“ஆடி வெள்ளியில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்..” கிடைக்கும் வரம்..!
ஆடி மாதம் என்றாலே… அம்மன் சாமிகளுக்கு மிகவும் விஷேஷமான ஒன்று என சொல்லலாம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் மிகவும் விஷேசமான நாளாக கருத்தப்படுகிறது..
குறிப்பாக இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறந்த நாள். அன்றைய நாளில் நாம் இஷ்ட தெய்வத்திற்கு உரிய பூஜைகள் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மந்திரம் :
இன்று ஆடி மூன்றாம் வெள்ளி இன்றைய நாளில் கருமாரியம்மன்., முத்து மாரியம்மன், அங்காள அம்மன், நாகத்தம்மன், மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் இஷ்ட தெய்வங்களுக்கு நாம் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
காலை மாலை வீட்டில் நேரத்தில் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை உச்சரித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
மந்திரம் :
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !
பராசக்தி பராசக்தி பராசக்தி ஓம் !
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ஓம் !
வந்திரங்கி காத்தருள்வாய் போற்றி ஓம் !
இந்த மந்திரத்தை உச்சரித்த பின் மனதார பிரார்த்தனை செய்து அம்மனை நினைத்து நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும்.
பின் தீப தூப ஆராதனை காண்பித்து அம்பாளை வழிபாடு செய்துவிட்டு, பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்பாளின் அருள் நிச்சயம் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். மேலும் ஒருவர் பயந்த சூழலில் இருக்கும் பொழுது அந்த மந்திரத்தை சொல்ல மனதில் தெம்பு பிறக்கும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..