தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்…!! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்..!!வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை., திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் ., அதேபோல் மதுராந்தகம், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது..
அதேசமயம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது., இதுவரையில் சுரங்கப்பாதைகள்., இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த பகுதிகளில் மழைநீர் சீர்மைக்கப்பட்டுள்ளது..