காவிரி நீர் திறப்பு குறைப்பு..!! கர்நாடக வெளியிட்டுள்ள முடிவு..!!
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு ஆயிரத்து 708 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு ஆயிரத்து 408 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கனஅடி என உபரிநீர் திறப்பு ஆயிரத்து 708 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 10ம் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48 புள்ளி 86 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..