‘நிர்பயா வழக்கு’ குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு, இன்று ஒத்திகை!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்காக இன்று ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் துக்கு தண்டனை வழங்கப்பட்டு அது மூன்று முறை தள்ளிபோடப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவடைந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணிக்காக ஹேங்மேன் பவன் ஜல்லத் நேற்று திகார் சிறைக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நடைபெற்றுள்ளது.

அதில் குற்றவாளிகளின் எடையை கொண்ட 4 பொம்மைகள் மூலம் இந்த ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்படுவது உறுதி என்றே சொல்லப்படுகிறது.

What do you think?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்!

கொரோனா சச்சினின் விழிப்புணர்வு வீடியோ