தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தென்காசி சென்றுள்ளார். அப்போது பேசிய அவர் மக்களால் நிராகரிக்கபட்டவர்கள் எரிச்சலில் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று பேசினார்.
நேற்று இரவு சென்னையில் இருந்து ரயில் பயணமாக தென்காசி சென்ற முதல்வர் ஸ்டாலின் ரூ.182 கோடி மதிப்பிலான 1 லட்சம் பேருக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினர். அவர் பேசுகையில், தென்காசி மக்களின் பிரதான கோரிக்கையான ஜம்பு நதி திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழக்கப்படாமல் இருந்தது.ஆனால் தற்போது அந்த திட்டத்திற்கு வனத்துறையிலிருந்து அனுமதி பெற்றுவிட்டது. மேலும், குழந்தைகள் என் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பினர். சிறுமி ஆர்தனவின் கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் மேலும், ஆன்மிகத்திற்கும், வீரத்திற்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 18 மாதங்களில் திமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர், இது மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றும் ஆட்சி என்று கூறினார் மேலும் அவர் பேசுகையில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தான் விரும்பவில்லை என்றும் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.