இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி அவரின் அடுத்த படமான ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியது. மேலும் அரசியல் தலைவர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு வீரர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
https://twitter.com/sunpictures/status/1602279615967670272
Released jailer update.!! Celebs who wished you a happy birthday..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிட்டா அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர், தனுஷ், மோகன்லால், அமிதப்பாட்சன், மாமூட்டி, கமல்ஹாசன், ஷாருக் கான் உள்ளிட்ட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், மொஹம்மது கைப் போன்றோரும் மற்றும் பல சினிமாதுறையினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக ஜெயிலர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ரஜினிகாந்த் இடம்பெற்றிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் லைக்கா நிறுவனம் சார்பில் லால் ஸலாம் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக வெளியூர் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அவரை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.