வெளியான போட்டோ..!! கொந்தளித்த கனிமொழி..!! இது தான் பாஜக..!!
பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு உள்ளது அப்பட்டமாக இந்தப் போட்டோவில் தெரிகிறது என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்றைய முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த உணவு உபசரிப்பு விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு நேற்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடியை மீண்டும் அவமதித்துள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு காரணம் அத்வானியும், பிரதமர் மோடியும் அமர்ந்திருக்க, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றுள்ளார் நாட்டின் முதல் பெண் குடிமகளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சாதிய ரீதியாக, பாலின ரீதியாக அவமதித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்கு ஆதரமாக விருது வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதனை திமுக எம்.பி கனிமொழி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு “பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலையே இதுதான். பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் அவரை அழைக்கவில்லை. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது என்றும் தலித் மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும், அதனை உணர்த்தும் விதமாக இந்த படங்கள் இருப்பதாகவும் சில எதிர்கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..