சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?
மே 5ம் தேதி, வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று சந்திரகிரகணம் ஏற்பட உள்ளது. சந்திரகிரகணம் ஏற்படும் பொழுது என்ன என்ன செய்யக்கூடாது..? கிரகணம் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும். என பல கேள்விகள் ? உங்கள் மனதில் இருக்கும். உங்களின் அனைவரின் கேள்விக்கும் பதில் இதோ…
மே 5ம் தேதி அதாவது நாளை சந்திரகிரகணம் ஏற்படவுள்ளது. மாலை 3:14 மணிக்கு தொடங்கி இரவு 7:31 மணி வரை கிரகணம் பிடித்து இருக்கும்.
கிரகணத்திலும் உச்ச கிரகணம் இருக்கிறது. உச்ச கிரகணம் இரவு 10:52 மணிக்கு ஏற்பட்டு மறுநாள் அதிகாலை 01:01 மணி வரை இருக்கும்.
சில நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் :
சந்திரகிரகணம் ஏற்படும் நேரத்தில் இருந்து இரவு 10:03 மணி வரை, துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் , துலாம் ராசி விசாகம் நட்சத்திரம், மேஷம் ராசி, மீனம் ராசி, தனுச ராசி உள்ளவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டும்.
சந்திர கிரகணத்தின் போது ராகு, கேது ராசி உள்ளவர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் எதிர், எதிர் திசையில் இருக்கும். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும். சில பரிகாரங்களை கடைபிடித்தாலே போதும். அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
செய்ய வேண்டிய பரிகாரம் : சந்திர கிரகணத்தின் போது சில பரிகாரங்களை செய்தால் நூறு மடங்கு பலன் தருமாம். அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது “ஓம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமக” எனும் மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.
குறிப்பாக சந்திர கிரகணம் பிடித்த பின் உணவு சமைப்பதை தவிர்க்கலாம் , கிரகணம் பிடிப்பத்தற்கு சமைத்து முடித்த பின் அதில் அருகம்புல் ஒன்றை போற்று வைக்கவும்.
அருகம் புல் போடாமல் விட்டுவிட்டால், வாந்தி, வயிற்று போக்கு போன்றவைகள் ஏற்படும்.
முக்கியமாக கர்பிணி பெண்கள் கிரகணம் பிடிக்கும் நேரத்திலோ, கிரகணம் பிடித்த பின்னரோ எந்த ஒரு செயலிலும் ஈடு படக்கூடாது. அப்படி செய்தால் அது உங்களின் கருவில் உள்ள சிசுவை பாதிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சிறந்தது, கர்ப்பிணி பெண்கள் படுத்து உறங்குவது. முக்கியமான ஒன்று சந்திரனின் ஒளி உங்கள் மீது படாமல் இருக்க வேண்டும்
கிரகணம் முடிந்த பின் மறுநாள் காலை தலைக்கு குளித்து முடித்து, விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம் புல் வைத்து வழிபட்டால் பிடித்த பீடை, கிரகணம் முற்றிலும் போய் விடும் என்பார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி