ADVERTISEMENT
பொரி அல்வா இனி வீட்டிலே…
திருவிழாவிற்கு வாங்கிய பொரி வீட்டில் மீந்துபோய் இருந்தால் இப்படி அல்வா செய்து அசத்துங்க.
நாம் வீட்டில் உள்ள பல்வேறு பொருட்களை வைத்து அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் தற்போது பொரியில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசிப்பொரி – 3 கப்
வெல்லம் – 3 கப்
புட் கலர் 2 சிட்டிகை
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி- 10
திராட்சை – சிறிதளவு
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் அரிசிப்பொரியைக் கொட்டியபின், பொரி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊறவைத்த பொரியை கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும் பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கரைத்து பாகு தயாரிக்க வேண்டும்.
பிறகு அடுப்பில், அடியில் கனமாக உள்ள பாத்திரத்தை வைத்து அதில், அரிசிப்பொரி விழுது, வெல்லப்பாகு ஆகியவற்றை கொட்டி மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும். இடையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதில் கொஞ்சம் புட் கலர், ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
அரிசிப்பொரி கலவை நன்றாகத் திரண்டு ஒட்டாமல் இருக்கும்போது அதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்.
2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் தேவையான அளவு முந்திரி,திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும் அதனை அல்வாவுடன் சேர்த்துக் கிளறிய பின் டேஸ்டியான அல்வா ரெடி.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.