பெங்களுருவில் பார்க் ஒன்றில், இந்து இளைஞருடன் முஸ்லிம் இளம் பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று அந்த இளைஞரிடத்தில் தகராறு செய்துள்ளது. பின்னர், நீ எப்படி முஸ்லிம் பெண்ணை காதலிப்பாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பெண் அணிந்திருந்த புர்காவை கழற்ற முயன்றுள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் கதறி அழ தொடங்கினார்.எனினும், அந்த கும்பல் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருகின்றனர். அதுவரை, இங்கேயே இருக்கவும் என்று மிரட்டினர். இந்த வீடியோ பெங்களுருவில் எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பெங்களூரு போலீஸ் கமிஷனரை டேக் செய்து எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களுருவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஏப்ரல் 11ம் தேதி இந்து நண்பருடன் அவரின் கிளாஸ்மேட்டான முஸ்லிம் பெண் பைக்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அஙுகே வந்த முஸலிம் இளைஞர்கள் 5 பேர் அவர்களை மிரட்டியுள்ளனர்.
நீ எப்படி இந்து பையனுடன் பேசிக் கொண்டிருக்கலாம்? உன்னுடைய பெற்றோர் போன் நம்பர் கொடு என்று அந்த பெண்ணை மிரட்டி கேட்டனர். அதற்கு, அந்த இளம் பெண் மறுக்கவே, அந்த பையனை தாறுமாறாக அடித்துள்ளனர். இதை வீடியோவாகவும் எடுக்கவும் செய்துள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் சந்திரா லேஅவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 5 முஸ்லிம் இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.