அதானி அம்பானிக்கு பதில்..! லோக்சபாவில் ராகுல் காந்தி பேச்சு..!
லோக்சபாவில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது அப்போது எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று ஆவேசமாக பேசியுள்ளார்., அவரின் அந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு தலையீடு செய்துள்ளதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடுத்தர மக்களை ஏமாற்றிய மோடி :
லோக்சபாவில் ராகுல் காந்தி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை புரிந்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் பட்ஜெட் தயாரிப்பு திட்டமிடலில் அல்வா கிளறிய சம்பவம் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான நலத்திட்டம் குறித்து இடம் பெறவில்லை. அந்த பட்ஜெட்டிலும் நாட்டில் 93% மக்களுக்கு எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
ஆனால் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை அம்பானி, அதானியிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் கொரோனா காலத்தில் தட்டு தட்டுவது, செல்போன் டார்ச்சை அடிக்கச் சொன்னது தான் நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? இந்த பட்ஜெட்டில் வேலையில்லா இளைஞர்களுக்காக எந்த திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளீர்கள்..? நீங்கள் அறிவித்துள்ள திட்டமானது பெருமுதலாளிகளுக்கு மட்டுமே உரியது என்பது போல இருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என தொடர்ந்து வலியுறுத்த பட்டாலும் அதுபற்றி பேசவே விருப்பம் இல்லாதது போல இருக்கிறார். அத்துடன், பாஜக நீங்கள் அச்சப்பட வேண்டாம்., பதற்றப்பட வேண்டாம்.. நான் மக்களின் கோரிக்கை களை பற்றி நான் விரைவில் பேசி முடிக்கிறேன்.
முன்பெல்லாம் இந்தியாவில் 6 பேர் சக்கர வியூகம் அமைத்துள்ளனர் அம்பானி, அதானியையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அஜித் தோவல், அம்பானி, அதானி பெயர்களை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி A1, A2 ஆகியோரை பாதுகாக்கிறார்..
இதனை நாம் புரிந்து கொள்வோம் என அம்பானி- அதானி பெயர்களை கிண்டலாகக் குறிப்பிட்டார். இதற்கும் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரித்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தரப்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார் என குற்றம் சாட்டப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..