குடியரசு தின விழாவில் நாடாகும் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ள்ளது. மேலும் 16 மாநிலங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் ஒன்றிய அரசு சார்பில் மிக பிரம்மாண்டங்க விழா நடத்தப்படும் அதில் மாநில அரசுகளின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்வலம் மேற்கொள்ளும். இந்நிலையில் தமிழ்நாடு சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது இதனால் தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் அந்த ஊர்தியை காட்சிப்படுத்தியது.
இந்நிலையில் இந்த ஆண்டிகிற்கான குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று கருத்துக்களை உடைய அலங்கார ஊர்தி சமர்பிக்கப்பட்டது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம் உட்பட 16 மாநிலங்களின் ஊர்திகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.