இன்று தொடங்கிய சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது அதில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அதில் அவர் 10% இடஒதுக்கீட்டை குறித்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இன்று காலை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது அதில பலதரபட்ட கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10% இடஒதுக்கீட்டை குறித்து விவாதிக்கபட்டது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பல கருத்துக்களை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், மிக அவசரமான காலகட்டத்தில் இந்த அணைத்து கட்சி கூட்டம் கூடியுள்ளது, பலநூறு ஆண்டுகள் பாதுகாக்கபட்ட சமூகநீதி கொள்கைக்கு இக்கட்டடான நிலை ஏற்பட்டுள்ளது, இத்தனை காலம் இடஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது தகுதி போய்விட்டது என்று கூறி வந்தவர்கள் இந்த 10% இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளனர். சாதியால் ஒதுக்கபட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தருவதே சமூகநீதி என்று முதல்வர் கூறினார்.
மேலும், தினசரி ரூ.2,200 சம்பாரிப்பவர்கள் ஏழைகளா? சமூகத்தாலும் கல்வியாலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கே இடஒதுக்கீடு அவசியம் ஆகும், பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை, இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. ஆகையால் ஏழைகளுக்கு எதிராக இருக்கும் 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது கடமையாகுமென்று அவர் பேசினார்.