‘YES Bank-ல் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது’ ரிசர்வ் வங்கி ஆளுநர் !

YES Bank படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Yes Bank வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியது இதனால் மத்திய ரிசர்வ் வங்கி Yes Bank நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

30 நாட்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் Yes Bank நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் 600 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக Yes Bank நிறுவனர் ராணா கபூர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறுகையில்,” YES Bank படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும். YES Bank-ல் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது” என்று கூறினார். மேலும் இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

What do you think?

‘தள்ளிப்போகும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி’ பின்னணி என்ன?

‘2021ல் நாங்க தான்’ சட்டப்பேரவையில் காரசார விவாதம்!